மறுபடியுமா? திறமைக்கேற்ப வரிசைப்படுத்தி கொள்ளும் போட்டியாளர்கள்!

The battlefields that have already erupted over the past two weeks are still in a state of disarray and are being re-deployed.

ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெடித்த போர்க்களமே இன்னும் ஓயாத நிலையில், மீண்டும் திறமைக்கேற்ப வரிசைப்படுத்தி கொள்ள சொல்லி கூறப்பட்டுள்ளது.

பிக் பாஸ் என்றாலே சண்டைக்கும், பிரச்சனைகளுக்கும், வாக்குவாதங்களுக்கும் குறைவு இருக்காது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பதாகவே போட்டியாளர்கள் தங்களை தரவரிசை படி நிறுத்திக்கொள்ளுங்கள் என கூறிய போது அங்கு மிக பெரிய பிரச்சனை வெடித்தது. இந்நிலையில், இந்த வாரத்தில் அதற்கும் மூன்று விதவிதமான டாஸ்குகள் நடத்தப்பட்டு விட்டது.

இந்த டாஸ்குகளில் நன்றாக விளையாடியது யார் என போட்டியாளர்கள் தங்களை தரவரிசைப்படி அமர்த்திக்கொள்ளுமாறு மீண்டும் பிக் பாஸ் கூறியுள்ளார். இந்த வாரம் என்ன பிரச்சனை நடக்க போகிறது என தெரியவில்லை, அதற்குள் ஆரிக்கும், ரியோவுக்கும் வாக்குவாதம் வந்து ரியோ எழுந்து சென்றுவிட்டார். இதோ அந்த வீடியோ,

unknown node