இயக்குனர் வெற்றிமாறன் தற்போது “விடுதலை” எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்திலும் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ,சேதன்,கிஷோர் குமார் ஜி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
unknown nodeViduthalaiAudioLaunch [Image Source : Twitter]
ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், நேற்று படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
unknown nodeVetrimaaran [Image Source : Twitter]
இந்த விழாவில் பேசிய வெற்றிமாறன் வாடிவாசல் படம் பற்றியும், வடசென்னை 2 படம் பற்றியும் பேசியுள்ளார். இந்த படங்கள் குறித்து பேசிய வெற்றிமாறன் ” இந்த விடுதலை 2 படங்களை முடித்த பிறகு வாடிவாசல் படத்தை தொடங்குவோம் வாடிவாசலுக்கு பிறகு வடசென்னை 2 தான் ” என கூறி அசத்தலான அப்டேட்டை கொடுத்துள்ளார்.
unknown nodeGOAT lineups of VetriMaaran [Image Source : Twitter]
மேலும், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.