திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் அதிகமாக வருகிறது – கயல் ஆனந்தி..!

Actress Kayal Anandi has said that she will get a chance to act in more films after marriage

திருமணம் முடிந்த பிறகு தனக்கு அதிக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதாக நடிகை கயல் ஆனந்தி தெரிவித்துள்ளார்.

நடிகை கயல் ஆனந்தி தற்போது இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள கமலி from நடுக்காவேரி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் விழாவில் பேசிய கயல் ஆனந்தி படத்தை பற்றியும் தனது திருமண வாழ்க்கையை பற்றியும் சில விஷியங்களை கூறியுள்ளார்.

இது குறித்து கயல் ஆனந்தி கூறுகையில் ” குடும்ப வாழ்க்கையில் எனது கணவர் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார். நான் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பது அவருக்கு ஆசை திருமணத்திற்குப் பிறகு எனக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. திருமணத்திற்குப் பிறகு படவாய்ப்புகள் வராது என்பார்கள். ஆனால், எனக்கு இப்போது தான் அதிக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகிறது.

பெற்றோரை விட பெண் மேல் அன்பு செலுத்துவது யாராகவும் இருக்க முடியாது, ஆனால் சில பெண்கள் தான் வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்வதில்லை. எங்காவது வழி தவறி விடுகிறார்கள். அதனால் தான் பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்கிறார்கள். இதுபோல பிரச்சனைகளை கடந்து எப்படி வாழ்வது என்பதை பற்றிய கதைதான் கமலி from நடுக்காவேரி திரைப்படம் என்றும் நடிகை ஆனந்தி கூறியுள்ளார்.