சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “மாவீரன்”. இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைக்கிறார்.
unknown nodeஇந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த மாதம் டீஸருடன் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இதனையடுத்து, இன்று படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
unknown nodeஇந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் இருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்களேன்-4 மாசத்துக்கு ஒரே படம் தான்.! நடிகர் தனுஷ் எடுத்த அதிரடி முடிவு.?
unknown nodeஅதன்படி, இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
unknown nodeமுதல் படமே கார்த்தியுடன், இரண்டாவது படம் சிவகார்த்திகேயனுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதால், அதிதி ஷங்கர் மிகவும் உற்சாகத்தில் உள்ளார். விரைவில் மாவீரன் படத்தின் அடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node