அடி தூள்…3 நாளில் 51 கோடி வசூல் செய்த ‘வாத்தி’.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Default Image

வாத்தி திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 51 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வருகிறது. படத்தை பார்த்த மக்கள் பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Vaathi box offfice
Vaathi box offfice [Image Source : Google ]

இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்த்தா மேனன் நடித்திருந்தார். தனிகெள பரணி, சாய் குமார், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், ஷா ரா  உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

Vaathi
Vaathi [Image Source : Google ]

இந்த நிலையில், படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில், உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியான 3 நாட்களில் 51 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றிருந்தது . அதனை தொடர்ந்து தற்போது வாத்தி திரைப்படன் வெளியான 3 நாட்களிலே 50 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்