அடி தூள்...5 நாட்களில் '500 'கோடி வசூலை கடந்த ஷாருக்கானின் 'பதான்'.!

கடந்த 25 ஆம் தேதி இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் நடிப்பில் வெளியான

கடந்த 25 ஆம் தேதி இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “பதான்”. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதற்காகவே பதான் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது என்றே கூறலாம்.

unknown node

Pathan Box Office[Image Source : Twitter]

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. அதிரடி ஆக்‌ஷன்-த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

unknown node

Pathan Box Office [Image Source : Twitter]

படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும், கண்டிப்பாக படத்தை திரையரங்கில் பார்க்கவேண்டும் எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் சில படம் ஷாருக்கானுக்கு சரியான கம்பேக் கொடுக்கும் திரைப்படம் என கூறி வருகிறார்கள்.

unknown node

Pathan Box Office [Image Source : Twitter]

இந்த பதான் திரைப்படம் வசூலில் திரைஉலகையே மிரள வைத்து வருகிறது என்றே கூறலாம். ஏனென்றால், படம் வெளியான 5 நாட்களில் 1 நாளுக்கு 100 கோடி என்கிற அடிப்படையில் வசூல் செய்து வருகிறது. இந்நிலையில், படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் 556 கோடி வசூல் செய்துள்ளதாகவும், இந்தியாவில் மட்டும் 275 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.