அடி தூள்...300 கோடி வசூலை கடந்த 'பொன்னியின் செல்வன் 2'...அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மொத்தமாக 300 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PS2 MOVIE

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மொத்தமாக 300 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் 2

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த ஏப்ரல் ஆம் தேதி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. இதனுடைய முதல் பாகம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட் ஆன நிலையில், இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.

unknown node

PS2 BOX OFFICE [Image Source : Twitter/@LycaProductions ]

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் கலக்கி வருகிறது என்றே கூறலாம்.

பொன்னியின் செல்வன் 2 வசூல்

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போதுவரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

unknown node

அதன்படி, பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி வசூலை கடந்துள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.