நடிகை யாஷிகா ஆனந்த் மீண்டும் ஆஜராக வேண்டும் -நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவர் மீண்டும் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவர் மீண்டும் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடிகை யாஷிகா ஆனந்த் நள்ளிரவு காரில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளி என்பவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் படு காயம் அடைந்த யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று சில மாதங்களுக்கு பிறகு வீடும் திரும்பினார். மேலும், இந்த விபத்து தொடர்பாக மகாபலிபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்காக யாஷிகா ஆனது மார்ச் மாதம் 22-ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்கள். ஆனால் அவர் ஆஜர் ஆகவில்லை.  எனவே,  கடந்த மார்ச் 23-ஆம் தேதி நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இன்று பிடிவாரண்டை ரத்து செய்ய கோரி  நடிகை யாஷிகா செங்கல்பட்டு நீதி மன்றத்தில் ஆஜரானார். இதனையடுத்து பிடிவாரண்ட்டும்  தளர்த்தப்பட்டது. இந்நிலையில், நடிகை யாஷிகா மீண்டும் வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனவும் செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.