நடிகை சுனைனாவுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

Actress Sunaina has been confirmed to have a corona infection

நடிகை சுனைனாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை சுனைனாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து வீட்டில் தனிமை படுத்திக்கொண்டார். கொரோனா தொற்று உறுதியானதை தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளது ” நான் மிகவும் கவனமாக இருந்தேன், ஆனாலும், எனக்கு கொரோனா பாதிப்புக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். எனது குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. அவர்கள் அனைவரும் தனிமையில் உள்ளனர். தயவுசெய்து முகமூடி அணிந்து, வீட்டிலேயே இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

unknown node