நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி..!

Leading actress Rahul Preity Singh has been diagnosed with a corona infection. He posted a post on his Twitter page

பிரபல முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத்தி சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற திரையுலகில்ல முன்னணி நடிகையாக வலம்வருபவர் ரகுல் ப்ரீத்தி சிங். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பினார் .சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பிய உடன் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு களுக்காக தயாராகி வந்த நிலையில்இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அவரே தனது ட்வீட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியிருப்பது, “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன். என்னை நானே தனிமைப் படுத்திக் கொண்டு உள்ளேன். இப்பொழுது நன்றாக இருக்கிறேன் நன்கு ஓய்வு எடுத்த பின்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். அனைவரும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள், பாதுகாப்புடன் இருக்கவும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

unknown node
நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி..!