பிரசாந்துக்கு ஜோடியாகும் நடிகை பிரியா ஆனந்த்..!!

Actress Priya Anand will play Prasanth in the film Andagan starring Prasanth

பிரசாந்த் நடித்துவரும் அந்தகன் படத்தில் பிரசாந்த்திற்கு நடிகை பிரியா ஆனந்த் நடிக்கவுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது .

மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்காக உள்ளது . பிரசாந்த் நடிக்கும் இந்தப் படத்தினை அவரது தந்தையான தியாகராஜன் இயக்கி தயாரிக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்பை தொடங்கிய இந்த படத்தில் கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா,கே‌எஸ் ரவிகுமார், பிக் பாஸ் வனிதா, ஆகியோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்ததாக இந்த படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் பிரியா ஆனந்த் பிராசாந்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.