பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை பூர்ணாவின் வளைகாப்பு...வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகை பூர்ணா கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருடைய வளைகாப்பு பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. அதற்கான புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை பூர்ணா கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருடைய வளைகாப்பு பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. அதற்கான புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை பூர்ணா

unknown node

Poorna [Image Source: Twitter]

நடிகை பூர்ணா கொடைக்கானல், முனியாண்டி, கந்தக்கோட்டை, லாக்கப் , துரோகி, காப்பான், உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் . இவர் தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகை பூர்ணா திருமணம்

unknown node

Actress Poorna Marriage [Image Source: Twitter/Cinebloopers]

நடிகை பூர்ணா கடந்த அக்டோபர் மாதம் தொழில் அதிபர் ஆசிப் அலி என்பவரை காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில், திருமணம் கொண்டார். அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நடிகை பூர்ணா வளைகாப்பு

திருமணமாகி 2 மாதங்களில் நடிகை பூர்ணா தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து,  பூர்ணாவுக்கு தனது குடும்பத்தினர் முன்னிலையில், பிரமாண்டமாக வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது.  வளைகாப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

unknown node

அதில் அவர் கூறியதாவது “என் வாழ்க்கையின் சிறந்த தருணங்கள் எனக்கும் என் குழந்தைக்கும் நீங்கள் பொழிந்த அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.