நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

Actress Pooja Hegde has been confirmed to have a corona infection

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வரும் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில் ” எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நான் வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

unknown node