மீண்டும் சிம்புவுக்கு ஜோடியாகும் நடிகை நயன்தாரா..??

Actress Nayanthara is reportedly set to star opposite Simbu in a Ram directed film.

ராம் இயக்கத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.

இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான பேரன்பு, தங்கமீன்கள், தரமணி, கற்றது தமிழ் ஆகிய நான்கு திரைப்படங்களும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இயக்குனர் ராம் அடுத்ததாக நடிகர் சிம்புவை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ராம் இயக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். நடிகர் சிம்பு தற்போது மாநாடு திரைப்படத்திலும் நடிகை நயன்தாரா ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சிம்புவுக்கு ஜோடியாகும் நடிகை நயன்தாரா..??