நடிகை மேகா ஆகாஷிற்கு விரைவில் டும்..டும்..டும்..!! மாப்பிள்ளை யார் தெரியுமா.?

Megha Akash Wedding

தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜாவாதான் வருவேன், தனுஷிற்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மேகா ஆகாஷ். இவர்  இந்த இரண்டு திரைப்படங்களின் மூலமே தமிழில் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே கூறலாம்.

MeghaAkash
MeghaAkash [Image Source : Twitter/@Rajkuma39348317]

தமிழையும் தாண்டி மேகா ஆகாஷ் தெலுங்கும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும்  சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும், தற்பொழுது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியும், சில படங்களில் நடித்தும் வருகிறார். இதற்கிடையில், நடிகை மேகா ஆகாஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MeghaAkash
MeghaAkash [Image Source : Twitter/@Meghaakashhoffl]

27 வயதான மேகா ஆகாஷ்  இதுவரை யாரும் திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில் தற்போது பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனை மேகா ஆகாஷ் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது உண்மை தகவலா..?  அல்லது வதந்தி தகவலா..?  என்பது குறித்து மேகா ஆகாஷே விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

MeghaAkash getting married
MeghaAkash getting married Twitter/@Meghaakashhoffl]

மேலும், நடிகை மேகா ஆகாஷ் மனு சரித்ரா எனும் தெலுங்கு திரைப்படத்திலும், மழை பிடிக்காத மனிதன் எனும் தமிழ் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்