ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் அவருக்குத் தங்கையாகவும் சசிகுமாருக்கு ஜோடியாகவும் நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதன்பிறகு விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார்.
unknown nodeMalavikaMohanan [image source: X/@MalavikaM_]
தொடர்ந்து தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைக்க, மாறன் படத்தில் ஹீரோயினாக நடித்தார். பின் நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்த மாளவிகா, இப்போது நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும், தங்கலான் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
unknown nodeMalavikaMohanan [image source: X/@MalavikaM_]
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அடிக்கடிப் புகைப்படமெடுத்து அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், முன்னதாக ரோஸ் மற்றும் சிவப்பு என இரட்டை நிற பட்டுப் புடவை அணிந்து அம்சமான புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார்.
unknown nodeMalavikaMohanan [image source: X/@MalavikaM_]
அந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அழகு சிலை, அழகு ராணி என்று வர்ணித்ததோடு, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இப்போது இன்னும் சில புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த படங்களில் பச்சை நிறப் புடவை அணிந்து பல விதமாக போஸ் கொடுத்துள்ளார்.
unknown nodeMalavikaMohanan [image source: X/@MalavikaM_]
அந்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஐ லவ் யூ, க்யூட்நெஸ் ஓவர்லோட் என நடிகை மாளவிகா மோகனனை வர்ணித்து வருகின்றனர். இப்புகைப்படங்கலளை 7,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.
