மக்கள் செல்வனுக்கு ஜோடியாகும் நடிகை கத்ரினா கைஃப்!

Actress Katrina Kaif to be paired with people rich, It has been reported that Vijay Sethupathi வ a new Hindi film.

விஜய்சேதுபதி நடித்து வரும் புதிய ஹிந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரினா கைஃப் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி திரை உலகில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் ஹிந்தியில் மாநகரம் படத்தின் ரீமேக் மும்பை கார் எனும் படத்தில் நடித்து வரக்கூடிய விஜய் சேதுபதி, அந்த தூண் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் அவர்களின் இயக்கத்தில் மற்றொரு ஹிந்திப் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை கத்ரினா கைஃப் நடிக்க உள்ளதாகவும், இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் கத்ரீனா கைஃப் தான் நடிக்கிறாரா என்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.