ராம் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு ..?

It has been reported that actor Simbu will act in the next film directed by director Ram. And composer Yuvan is sure to compose music for Ram’s next film

இயக்குனர் ராம் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ராமின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைப்பது உறுதி.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்திலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவகவுள்ள படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ஏனெனில் யுவன் ஷங்கர் ராஜாவின் சொந்த இணையதளமான u1records.com இயக்குனர் ராமின் அடுத்த படத்திற்கு தான் இசையமைப்பதாக தெரிவித்துள்ளார்.