வலிமை கதாநாயகியிடம் அப்டேட் கேட்ட நடிகர் சித்தார்த்..!!

It has been reported that actor Siddharth has asked actress Huma Qureshi for an update on the movie Valaimai starring Ajith.

அஜித் நடித்து வரும் வலிமை படத்திற்கான அப்டேட்டை நடிகர் சித்தார்த் நடிகை ஹூமா குரேஷியிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்திலிருந்து இதுவரை பர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் போன்ற எந்த ஒரு அப்டேட்டும் படத்திலுருந்து வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஆகியோரிடம் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர். அதனை தொடர்ந்து நடிகர் அஜித் குறித்த நேரத்தில் வெளியாக்கும் என்று அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் நடிகர் சித்தார்த் வலிமை படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஹூமா குரேஷியிடம் வலிமை அப்டேட் வாங்கி கொடுங்கள் மேடம் என்று கேட்டுள்ளதாகவும் அதற்கு நடிகை ஹூமா குரேஷி இதை தயாரிப்பு நிறுவனம் தான் கொடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் வலிமை படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.