மிகவும் மோசமான நிலையில் மறைந்த நடிகர் ராஜசேகர் மனைவி.!

1980,1990 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் ராஜசேகர். நடிகராக மட்டுமின்றி, இவர் சினிமா துறையில், இயக்குனர், ஒளிப்பதிவாளராகவும்

1980,1990 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் ராஜசேகர். நடிகராக மட்டுமின்றி, இவர் சினிமா துறையில், இயக்குனர், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு உடல்நல குறைவால் காலமானார். இவருக்கு தாரா என்ற மனைவியும் இருக்கிறார்.

unknown node

rajasekar [Image Source : Google ]

மேலும், ராஜசேகர் இறப்பதற்கு முன்பு, சென்னை வடபழனியில் 500 சதுர அடியில் ஒரு பிளாட் ஒன்றை வாங்கினார். மறைந்த நடிகர் ராஜசேகரின் மனைவி தாரா சென்னையில் வசித்து வருகிறார். இவரது கணவர் வாங்கிய வீட்டிற்கு இன்னும் 35 லட்சம் கட்டவில்லை என, வங்கி அதிகாரிகள் இவரிடம் பணம் கேட்டுள்ளார்களாம்.

unknown node

Thara [Image Source : Google ]

அதற்கு, இந்த வீட்டை வாடகைக்கு விட்டு, அதில் வரும் பணத்தில்தான் வாழ்க்கை நடத்துகிறேன். என்னால் எப்படி அவ்வளவு பணம் கொடுக்க முடியும் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.  இது குறித்து பேசிய அவருடைய மனைவி தாரா ” என்னுடைய கணவர் வாங்கிய அந்த வீட்டை தற்போது வாடகைக்கு விட்டு அதன் மூலம் வரும் பணத்தை வைத்து தான் நான் வாழ்கிறேன்.

unknown node

s rajasekar [Image Source : Google ]

வங்கியில் அந்த வீட்டை ஏலத்துக்கு விடுவதை விட வேற வழி இல்லை என்று கூறிவிட்டார்கள். என்னுடைய கணவர், நடிகர்கள், இயக்குனர்கள், சின்னத்திரை நடிகர் சங்கம் என்று எல்லா சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார். எனவே எனக்கு உதவி வேண்டும் என்று அங்கேயும் உதவி கேட்டு போனேன். ஆனால், யாரும் உதவி செய்யவில்லை.

unknown node

s rajasekar wife [Image Source : Google ]

எந்த நேரத்தில் வேண்டுமானாலும். என்னை இந்த வீட்டை விட்டு வெளியேற்றி விடுவார்கள். எனவே, முதலமைச்சருக்கும் கண்ணீருடன் கோரிக்கை வைக்கிறேன். சினிமா துறையில் இருப்பவர்களும் உதவி செய்யுங்கள்” என சோகத்துடன் பேசியுள்ளார்.

மிகவும் மோசமான நிலையில் மறைந்த நடிகர் ராஜசேகர் மனைவி.!