ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோ ,வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு இவருடைய நகைச்சுவை குணத்திற்காகவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
unknown nodemansoor ali khan [Image Source : Google ]
இந்நிலையில், இன்று நடிகர் மன்சூர் அலிகான் தனது 61-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவருக்கு சமூகவலைத்தளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
unknown nodemansoor ali khan [Image Source : Google ]
இதனையடுத்து, அவர் தற்போது “சரக்கு” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படக்குழுவுடன் மன்சூர் அலிகான் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் மன்சூர் அலிகான் பலங்களை சுற்றி வைத்துக்கொண்டு முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
unknown nodeஅந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வீடியோ பார்த்த அனைவரும் “தலைவன் வேற லெவல் தான் ” என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் மன்சூர் அலிகான் சரக்கு திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டது.