நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்க்கு கொரோனா தொற்று உறுதி..!!

Corona infection has been confirmed for actor Jr. NDR

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா 2 வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் சினிமா பிரபலங்கள் மக்கள் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரானஜூனியர்என்.டி.ஆருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியானதை தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் ” எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தயவு செய்து யாரும் கவலைப்பட வேண்டாம் நான் நன்றாகவே இருக்கிறேன். எனது குடும்பமும் நானும் நம்மை தனிமைப்படுத்தியுள்ளோம். மருத்துவர்களின் நெறிமுறைகளையும் நாங்கள் பின்பற்றுகிறோம். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

unknown node