விரைவில் நடிகர் அசோக் செல்வனுக்கு திருமணம்..? வெளியான சீக்ரெட் தகவல்.!
தொடர்ந்து இளைஞர்களை கவரும் கதாபாத்திரங்கள் இருக்கும் தேர்வு செய்து நடித்து முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான நித்தம் ஒரு வானம் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆனது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் “நெஞ்சமெல்லாம் காதல்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அசோக் செல்வனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
33-வயதாகும் அசோக் செல்வன் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனையடுத்து தற்போது திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆம், அசோக் செல்வன் நடிகரும், தயாரிப்பாளருமான ஒருவரின் மகளை காதலித்து வருகிறாராம்.
அசோக் செல்வன் பெற்றோர்களும், அவர் காதலிக்கும் அந்த பெண்ணுடைய வீட்டின் பொற்றோர்கள் ஆகிய இரு வீட்டாரூம் கலந்து பேசி திருமணத்திற்கு முடிவு செய்துள்ளார்களாம். எனவே, விரைவில் அசோக் செல்வனுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது வதந்தி தகவலா..அல்லது உண்மை தகவலா என்பதை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.