கைக்குழந்தையுடன் வந்த தாய்க்கு உதவி...வியக்க வைத்த நடிகர் அஜித்தின் செயல்!!

நடிகர் அஜித்குமார் கிளாஸ்கோவிலிருந்து சென்னைக்கு கை குழந்தையுடன் பயணம் செய்த பெண்ணிற்கு உதவி செய்துள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் நெகிழ்ச்சியுடன்

நடிகர் அஜித்குமார் கிளாஸ்கோவிலிருந்து சென்னைக்கு கை குழந்தையுடன் பயணம் செய்த பெண்ணிற்கு உதவி செய்துள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் நெகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் ” என் மனைவி இன்று கிளாஸ்கோவிலிருந்து சென்னைக்கு பயணம் செய்கிறாள்.எங்களுடைய 10 மாத குழந்தையுடன் தனியாக பயணம் செய்கிறாள்.

unknown node

இன்று லண்டன் ஹீத்ரோவில் அஜித்குமாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.என் மனைவி ஒரு கேபின் சூட்கேஸ் மற்றும் ஒரு குழந்தை பையுடன் பயணம் செய்தாள். இதனை பார்த்த அஜித் சார் எனது மனைவி தனியாக வரும் வரை விமானத்தை புரிந்து கொண்டு அங்கிருந்து எங்கள் சூட்கேஸ் பையை எடுத்து கொண்டு உதவி செய்தார்.

unknown node

பையை எடுத்துக்கொண்டதற்கு என் மனைவி எதிர்த்தபோதும், அஜித் சார் “பரவாயில்லை. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதனால் அது எப்படி இருக்கிறது என்று எனக்குத் தெரியும்” என கூறிவிட்டு விமானம் வரை தனது கேபின் சூட்கேஸுடன் எடுத்துச் சென்றார். பிறகு அதை கேபின் குழுவினரிடம் கொடுத்து, பை என் மனைவியின் இருக்கையில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்தார். இந்த உதவி பெரிய உதவி நன்றி அஜித் சார்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

unknown node

ajithkumar AK62 [Image Source : Google ]

மேலும் நடிகர் அஜித் தற்போது தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.