துணிவு கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகர்... நடிகர் அஜித் மீது வழக்கு..?

அஜித் நடித்த துணிவு திரைப்படம் இன்று அதிகாலை 1மணிக்கு தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான நிலையில், இன்று அதிகாலையிலே அஜித் ரசிகர்கள் திரையரங்கிற்கு

அஜித் நடித்த துணிவு திரைப்படம் இன்று அதிகாலை 1மணிக்கு தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான நிலையில், இன்று அதிகாலையிலே அஜித் ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்று ஆட்டம் ஆடி படத்தை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில்,  சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் படத்தை பார்க்க  ரசிகர் ஒருவர் பரத் எனும் 19-வயது இளைஞர் மெதுவாக  சென்ற லாரி ஒன்றின் மீது ஏறி நடனம் ஆடியுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென பரத்குமார் தவறி ரோட்டில் விழுந்தார். இதனால் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்த பரத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தலைவர் பொன்னுசாமி ட்வீட்டர் பக்கத்தில் ” துணிவு பட வெளியீடு, ரசிகர் மரணம்., பொறுப்பற்ற தன்மைக்கு நடிகர் அஜித்குமார் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி பரத்தின் குடும்பத்திற்கு அஜித் 1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

unknown node