தளபதி 67
unknown nodeThalapathy 67
விஜய் தற்போது தனது 67-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிமாக ‘தளபதி 67 ‘ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
தளபதி 67 படத்தில் நடிக்கும் பிரபலங்கள்
unknown nodeThalapathy 67 [Image Source: Twitter ]
இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், கூட படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமலே தளபதி 67 படத்தில் த்ரிஷா, அர்ஜுன் , சஞ்சய் தத் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
தளபதி 67 படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன்
இந்த நிலையில், தளபதி 67 படத்தில் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் ஏற்கனவே பரவி வரும் நிலையில், தற்போது அர்ஜுன் கெத்தான லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் அர்ஜுன் விருமாண்டி படத்தில் கமல்ஹாசன் இருப்பது போல வைத்துள்ளார்.
unknown nodeலோகேஷ் கனகராஜும் கமல்ஹாசனின் தீவீர ரசிகன் எனவே ஒவ்வொரு படத்தலையும் கமலுடைய ரெபரன்ஸ் காட்சிகளை வைத்திருப்பார். எனவே தற்போது வைரலாகி வரும் புகைப்படத்தை பார்க்கையில் அவர் கண்டிப்பாக தளபதி 67 படத்திற்காக தான் இந்த லுக்கில் இருக்கிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.