ஆக்சன் கிங் அர்ஜுன் ஆட்டம் ஆரம்பம்..'லியோ' படத்தின் தாறுமாறான லேட்டஸ்ட் அப்டேட்.!

வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியத்தில் உருவாகி வரும் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த

வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியத்தில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

unknown node

LEO VIJAY [Image Source : Twitter]

படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

unknown node

LEO Mysskin [Image Source : Google ]

இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக படத்தில் மிஷ்கின் மற்றும் கவுதம் மேனனின் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்துள்ளது. அடுத்தபடியாக சஞ்சய் தத் மற்றும் அர்ஜூனின் போஷன் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

unknown node

Arjun Sarja [Image Source: Twitter]

அதன்படி ,  காஷ்மீரில் மார்ச் 25 வரை ஷூட்டிங் அர்ஜூன் நடிக்கும் காட்சிகளை எடுக்க லியோ படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.