அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பது ரொம்ப கஷ்டம்...மனம் திறந்த நடிகர் சிம்பு.!

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் ப்ரியா பவானி சங்கர், டிஜே, கெளதம்

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் ப்ரியா பவானி சங்கர், டிஜே, கெளதம் கார்த்தி, உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

unknown node

str pathu thala[Image Source : Google ]

இந்த திரைப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சிம்பு தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

unknown node

pathu thala movie [Image Source : Google ]

இது குறித்து பேசிய அவர் “சில நடிகர்கள் ஆக்ஷன் காட்சியில் நடித்தால், இவரெல்லாம் ஏன் சண்டை காட்சியில் நடிக்கிறார் என்று சில நேரம் நினைக்க தோன்றும். ஆனால் சண்டை காட்சிகளில் நடிப்பது கஷ்டம். சுலபம் எல்லாம் இல்லை.

unknown node

Silambarasan TR and gautham karthik [Image Source : Google ]

ஒரு நடிகர் ஆக்ஷன் காட்சியில் எல்லோரையும் திருப்திப்படுத்தும் படி நடித்துவிட முடியாது. ஆனால்,  ஆக்ஷன் காட்சியில் கவுதம் கார்த்திக் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.  அவர் கஷ்டப்பட்டாலும் வெளியே சொல்ல மாட்டார். ‘பத்து தல’ படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் கவுதம் கார்த்திதான்” என நெகிழ்ச்ச்சியுடன் பேசியுள்ளார்.