கவின் நடிப்பில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருக்கிறது என கருத்துக்களை கூறி வருகிறார்கள். விமர்சனத்துக்கு ஏற்றது போல படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
unknown nodeDaDa Twitter Review [Image Source : Twitter]
அந்த வகையில், இந்த “டாடா” திரைப்படம் வெளியான 3 நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 6 லிருந்து 6.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeDada box office [Image Source : Twitter]
முதல் நாளை விட அடுத்ததாக 2,3 ஆகிய நாட்களில் படத்தின் வசூல் அதிகமாகியுள்ளது. மேலும் படத்திற்கு இன்னும் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கவின் சினிமா கேரியரில் இது மிகப்பெரிய ஹிட் கொடுத்த படமாக இருக்கும் என்பதை எந்த சந்தேகமும் இல்லை.
unknown nodeDaDa Running Successfully In Cinemas [Image Source : Twitter]
மேலும், இந்த ‘டாடா ‘ திரைப்படத்தை கணேஷ் கே பாபு என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் அபர்ணா தாஸ் ஹீரோயினாகவும், பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபௌஸி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.