கடைசி நேரத்தில் ரஜினி படத்திற்கு வந்த திடீர் சிக்கல்! தள்ளி செல்லும் ரிலீஸ் தேதி?
ரஜினி நடித்துள்ள லால்சலாம் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்திருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக தன்னுடைய மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால்சலாம் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் விஸ்னு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறர்கள்.
இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டவுடன் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகி விட்டது என்றே சொல்லவேண்டும். இப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்து விட்டதாகவும், படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு விட்டது.
இன்று முதல் மொய்தீன்பாய் ஆட்டம் ஆரம்பம்..! லால் சலாம் படத்தின் புதிய அப்டேட்..!
ஆனால், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், லால் சலாம் படத்தில் மேலும் இரண்டு பாடல்களை இணைக்க ஐஸ்வர்யா திட்டமிட்டுள்ளாராம். அதனால் மீண்டும் அந்த பாடல் காட்சியை மட்டும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறாராம். அது மட்டுமில்லாமல், படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புகள் மிகவும் குறைவு தானாம்.
ஏனென்றால், படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் எப்படியோ அழிந்துவிட்டதாம். இதனால் அதனை எப்படி திரும்ப எடுக்கலாம் என திட்டமிட்டு அதற்கான முயற்சியில் படக்குழு இறங்கி இருக்கிறதாம். இதனால் அழிந்த காட்சிகள் அனைத்தையும் மீண்டும் கொண்டு வர வெளிநாடுகளில் இருந்து இதனை பற்றி தெரிந்தவர்களையும் அழைத்து வர இருக்கிறார்களாம்.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ரஜினியின் படத்திற்கு திடீரென இப்படி ஒரு சிக்கல் வந்துள்ள காரணத்தால் படக்குழுவே மிகவும் சோகத்தில் இருக்கிறார்களாம். இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்லவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170-வது படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.