16-வது ஆசிய திரைப்பட விருதுவிழாவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல பிரபலங்களின் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி இருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
unknown nodePonniyin Selvan [Image Source: Twitter ]
வசூல் ரீதியாக 500 கோடிகளுக்கு மேல் செய்து பல சாதனைகள் படைத்தது. விமர்சன ரீதியாகவும் படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்நிலையில், இந்த திரைப்படம் 16-வது ஆசிய திரைப்பட விருதுகளில் ஆறு பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரிவுகள் :
சிறந்த திரைப்படம் – பொன்னியின் செல்வன் சிறந்த இசை – ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த எடிட்டிங் -ஸ்ரீகர்.பிரசாத், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு -தோட்டா தரணி,சிறந்த ஒளிப்பதிவு – ரவி வர்மன், சிறந்த ஆடை வடிவமைப்பு -ஏகலக்கனி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
unknown nodeஇந்த தகவலை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும், இதைப்போல ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்காக ஸ்ரீனிவாஸ் மோகனுக்காகவும், சிறந்த ஒலிக்காக அஷ்வின் ராஜசேகருக்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.