தமிழ் திரையுலகமே ஒட்டுமொத்தமாக காத்திருந்த பொன்னின் செல்வன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்தத் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
unknown nodeபடத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். நேற்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, என 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் படம் மிகவும் அருமை எனவும் படத்தின் இரண்டாவது பாகத்திற்கு வெயிட்டிங் எனவும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்களேன் –உங்க 2 பசங்கள நினைத்து மட்டும் பெருமை பட்டா பத்தாது…சூர்யா தங்கை அதிரடி பேச்சு.!
unknown nodeபடத்திற்கு அமோகமாக பாசிட்டிவ்வான கருத்துக்கள் குவிந்து வருவதால் வசூல் ரீதியாகவும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் லைக்கா நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
unknown nodeஅதன்படி “பொன்னியின் செல்வன்” திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 80 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் வெளியான திரைப்படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் இது தான் என்ற சாதனையும் படைத்துள்ளது.
Thank you for giving #PS1 the biggest ever opening day for Tamil cinema worldwide!#PonniyinSelvan1 #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsoffical @tipsmusicsouth pic.twitter.com/mhFEB66jF0
— Lyca Productions (@LycaProductions) October 1, 2022