ரஜினி படத்தில் நடிக்க அறிய வாய்ப்பு..! வெளியான அசத்தல் அறிவிப்பு...!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ‘லால் சலாம்’ என புதிய திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ‘லால் சலாம்’ என புதிய திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர்கள்  விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

unknown node

படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குவதால், படத்தில் நடிகர் ரஜினிகாந்தும் ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இதனால் என்னவோ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. சமீபத்தில் தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

unknown node

இதையும் படியுங்களேன்-இதெல்லாம் எப்படிங்க செட் ஆகும்..? அஜித்திற்கு வில்லனாகும் பிரபல முன்னணி ஹீரோ..!?

இந்நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் நடிக்க ஆட்கள் தேவை என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் டிவிட்டரில் அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிக்க ஆர்வமுள்ள நடிகர்கள் ஆண்கள் , பெண்கள் சிறுவர்கள், சிறுமிகள், அணைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம்.

unknown node

சென்னை சாலிகிராமம்,கோல்டன் பாரடைஸ் திருமணக்கூடம் இடத்தில் வைத்து நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 16-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் தனக்கு விருப்பம் இருக்கிறது என நடிக்க ஆர்வம் உள்ளதாக தெரிவித்து வருகிறார்கள்.

unknown node