“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

கவின் நடிப்பில் உருவாகியுள்ள "Bloody Beggar"  படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

Bloody Beggar From Diwali

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் “Bloody Beggar” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் தீபாவளி பாண்டியையொட்டி அக்டோபர் 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் கதை எப்படி இருக்கப்போகிறது என்பதை கணிக்க முடியாத அளவுக்கு இருப்பதன் காரணமாகவே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது என்றே சொல்லலாம்.

ஏனென்றால், படத்தின் டீசர் வெளியாகும்போது படத்தில் கவின் பிச்சைக்காரன் வேடத்தில் நடிக்கிறார் என்பது தெரிந்தது. அதன்பிறகு வெளியான ப்ரோமோக்களை வைத்து பார்க்கையில், எதற்காக பிச்சைக்காரன் வேடத்தில் இருக்கிறார் ஒரு வேலை சைலண்டாக படத்தில் சம்பவம் செய்துவிட்டு அந்த சம்பவங்களை வெளியில் காட்டக்கூடாது என்பதற்காகப் பிச்சைக்காரன் வேடம் போட்டிருக்கிறாரோ என்பது போல யோசிக்க வைத்தது.

ஆனால், இப்போது வெளியிடப்பட்டிருக்கும் டிரைலரை வைத்துப் பார்க்கையில் படத்தில் உண்மையாகவே கவின் பிச்சைக்காரராக வாழ்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால், கை கால்கள் நன்றாக இருந்தும் அதனை மறைத்து வைத்து எதற்காக அப்படி நடிக்கிறார் என்பது படம் பார்த்தால் தான் நமக்குப் புரியும். அந்த அளவுக்குப் பல டிவிஸ்டான பல விஷயங்களைப் படத்தில் வைத்திருப்பது ட்ரைலரை பார்க்கையில் புரிகிறது.

பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் கவின் திடீரென ஒரு மாளிகையைப் பார்த்துவிட்டு அதற்குள் நுழைகிறார். அத்துடன் அங்கிருக்கும் குளியலறையில் குளித்துவிட்டு அரண்மனையில் என்ஜாய் செய்கிறார். பிறகு திடீரென இரண்டு பேர் கவினின் பிச்சைக்கார கெட்டப் மாற்றி வேறு கெட்டப்புக்கு மாற்றிவிடுகிறார்கள். எனவே, ட்ரைலரிலே பல குழப்பத்தை வைத்து சஸ்பென்ஸை கொடுத்துள்ளதால் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு எங்கேயோ சென்றுள்ளது. டிரைலரை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தள பக்கங்களில் கவினின் நடிப்பை பற்றி பாராட்டி பேசி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்