83 படத்தில் நடிக்கிறார் ஜீவா !!!

Default Image

இந்தியா கடந்த 1983 ஆம் ஆண்டு முதன் முறையாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் உலகக்கோப்பையை வென்றது.இந்த கோப்பையை கபில்தேவ் தலைமையில் உள்ள அணி வென்றது.

இந்த உலகக்கோப்பை மையமாக வைத்து  ’83’   என்ற படத்தை  கபீர்கான் பாலிவுட்டில் இயக்கி கொண்டிருக்கிறார்.இந்த படத்தின் முக்கிய கேரக்டரான கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர்சிங் நடித்து கொண்டு இருக்கிறார்.

இந்த படத்தை  இயக்குவதற்கு  1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அனைத்து  நபர்களும் ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக இயக்குனர் கபீர்கான் கூறியுள்ளார்.

மேலும் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிக்க விஜய் தேவரகொண்டாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது .இந்த பேச்சு வார்த்தை சரிவராத காரணத்தினால்  கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிக்க நடிகர் ஜீவாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் நடிக்க மற்ற நட்சத்திரங்களின் தேர்வும்  நடைபெற்று  கொண்டு இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்