சிவகங்கை மாவட்ட காளையார்கோவில் மருது பாண்டியர்களில் 216 வது குருபூஜை நேற்று நடந்தது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் 3 வாகனங்களுக்கு மேல் செல்ல கூடாது,பட்டாசு வெடிக்க கூடாது என்ற உத்தரவு இருந்தது.
unknown nodeஇதை மீறியதால் நிகழ்சியில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. அம்மா அணி,துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் ,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர்,சட்ட மன்ற உறுப்பினர் கருணாஸ் உட்பட 68 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயேந்திரன் உத்தரவின் பெயரில் காளையார்கோவில் காவல்துறையினர் இந்த வழக்கை பதிவு செய்தனர்.