யூடியூபில் எருமசாணி என்ற சேனலில் காமெடி வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் விஜய். இவர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
unknown nodeeruma saani vijay [Image Source: Twitter ]
இந்த படத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள் நிதி நடிப்பில் வெளியான டி ப்ளாக் திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். இந்த திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றிபெற்றது.
unknown nodeeruma saani vijay [Image Source: Twitter ]
இந்த படத்தை தொடர்ந்து அவர் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. இதற்கிடையில், எருமை சாணி விஜய் காதலிக்கும் பெண் யார் என்ற விவரமும் அவருடைய புகைப்படமும் இணையத்தில் கசிந்துள்ளது. ஆம், எருமை சாணி விஜய் கடந்த 6 ஆண்டுகளாக நக்ஷத்ரா மூர்த்தி என்பவரை காதலித்து வருகிறாராம்.
unknown node