இந்த ஆண்டு முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 3 திரைப்படங்கள்..??

Among the films released this year, information is now available about the 3 highest grossing films on the first day in Tamil Nadu.

இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 3திரைப்படங்கள் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் 50 % இருக்கையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டு மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பிரமாண்ட வசூல் சாதனை செய்தது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் முதல் நாளில் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. இதில் முதல் இடத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் வெளியான முதல் நாளில் 12.35 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் கடந்த 9 ஆம் தேதி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் 10.40 கோடி வசூல் செய்துள்ளது. மூன்றாவது இடத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் 5.81 கோடி வசூல் செய்துள்ளது.