சென்னை :இயக்குனர் மற்றும் சினிமா விமர்சகருமான, ப்ளூ சட்டை மாறன் ரஜினி படங்கள் வெளியானாலோ, அல்லது ரஜினி சம்பந்தமான ஏதேனும், தகவல்கள் வெளியானால் போதும் உடனடியாக அவரை எப்படி விமர்சிப்பது என கன்டென்ட் யோசித்து கலாய்த்து விடுவார். இவர் இதுபோன்ற செயல்களில், இவர் ஈடுபடுவதன் காரணமாகவே, ரஜினி ரசிகர்கள் அடிக்கடி ப்ளூ சட்டை மாறனை திட்டுவதும் உண்டு.
அப்படி தான் தற்போது, ரஜினி நடித்துள்ள வேட்டையன் படம் அடுத்த மாதம் 10-ஆம் தேதி வெளியாவதையொட்டி படத்தின் முதல் நாள் வசூலை வைத்து கலாய்த்துள்ளார். அதற்கு முக்கியமான காரணமே GOAT படத்தின் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது தான். விஜய் நடித்த GOAT படம் வெளியான முதல் நாளில் 128 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.
அந்த அறிவிப்பை பார்த்த ரஜினி ரசிகர்கள் பலரும் அது எப்படி இவ்வளவு வசூல் செய்யும்? என கேள்விகளை எழுப்ப தொடங்கினார்கள். இந்த சூழலில், விஜய்க்கு ஆதரவு கொடுக்கும் விதமாக ரஜினியை கலாய்த்து ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார். வடிவேலுவின் மீம் டெம்ப்லேட் ஒன்றை வெளியீட்டு ” அக்டோபர் 11 முதல் நாள் வசூல் 150 ” என வேட்டையன் படத்தின் தயாரிப்பாளர் அறிவிப்பார் என சூசகமாக கூறியுள்ளார்.
unknown nodeblue sattai maran TROLL [File Image]ரஜினியை கலாய்த்து பதிவிட்டு வருவது மட்டுமில்லாமல் விஜய் படங்களுக்கு அவர் ஆதரவாக பேசி வருவதும் ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உலகளவில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம் லியோ தான் எனவும், முதல் நாளில் 100 கோடி வசூல் செய்த ஒரே தமிழ் நடிகர் விஜய் தான் எனவும், விஜய் தவிர வேறு எந்த தமிழ் நடிகரின் படமும் முதல் நாளில் 100 கோடியை தொடவில்லை என கூறியுள்ளார்.
ப்ளூ சட்டை பதிவை பார்த்த ரஜினி ரசிகர் இப்படிக்கு. அனைத்து தமிழ் படங்களையும் தயாரித்த தயாரிப்பாளர் என கலாய்க்க அதற்கும் ப்ளூ சட்டை பதில் அளித்து வருகிறார்.
unknown nodeblue sattai maran about leo
unknown node