100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படம்...ஜெயம் ரவியுடன் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்...!

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான அகிலன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவர் அடுத்ததாக இறைவன் திரைப்படத்தில் நடித்து

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான அகிலன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவர் அடுத்ததாக இறைவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள சைரன் படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

unknown node

இதற்கிடையில், ஜெயம் ரவி நடிக்கவுள்ள 32-வது படத்திற்கான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ஜெயம் ரவியின் 32-வது படம் கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்படவுள்ளதாம். அவருடைய சினிமா கேரியரில் இதுதான் அதிக பட்ஜெட் படமும்.

unknown node

JR32 [Image Source : Google ]

எனவே படம் பிரமாண்ட பட்ஜெட் என்றால் இசைக்கு வேறு யாரு..இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இந்த திரைப்படம் ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் நிறுவனம் சாரிப்பில் தயாரிக்கவுள்ளாராம்.

unknown node

ponniyin selvan 2 [Image Source : Twitter]

விரைவில் இந்த திரைப்படத்திற்கான இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜெயம் ரவி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.