ஒரே மேடையில் 10 ஹீரோயின்கள்.., நடுவில் நம்ம அண்ணாச்சி.! டிக்கெட் எடுத்து வந்து சேருங்க..,

Default Image

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தற்போது “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக சரவணன் அறிமுகமாகிறார்.

அதிரடி சண்டைக்காட்சிகளுடன் தயாராகி இருக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மேலும், படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் , இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இதனையடித்து  படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா வரும் மே 29-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில், பிரபல நடிகைகளான, பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்ஷிகா, ஊர்வசி ரவுடேலா,யாஷிகா ஆனந்த், ராய் லக்ஷ்மி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி ஆகிய நடிகைகள் கலந்து கொள்கின்றார்கள். மொத்தம் பத்து ஹீரோயின்கள் வருவதால் கோலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்