சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு 1 லட்சம் பரிசு தரப்படும் – பாமக பிரமுகர் சர்ச்சை பேச்சு!

Controversy has erupted over the claim that the youth who kicks actor Surya will be given a prize of Rs 1 lakh.

நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு 1 லட்சம் பரிசு தரப்படும் என பாமக பிரமுகர் சித்தமல்லி பழனிச்சாமி கூறியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இயக்குனர் ஞானவேல் அவர்கள் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியாகிய படம் தான் ஜெய்பீம். பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும் அவர்களுக்கு நடக்கக்கூடிய அநீதியை குறித்தும் இந்த படத்தில் கூறப்பட்டிருக்கும். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், ஒரு சில சமூகத்தினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்த படத்தில் மறைந்த நிர்வாகி ஒருவரின் பெயரை வைத்து இருப்பதாக கூறி அண்மையில் சர்ச்சை எழுந்தது. எனவே பாமக கட்சி நிர்வாகி சித்தமல்லி பழனிசாமி என்பவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து மயிலாடுதுறையில் உள்ள காவல் நிலையத்தில் ஜெய்பீம் பட தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மனு அளித்துள்ளார்.

அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எங்களுடைய பகுதிக்கு சூர்யா வந்தால் அவரை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் ரூபாய் பணத்தை சமர்ப்பணமாக கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும், அந்த வகையில் நாங்கள் அவனை தாக்குவதற்கு தயாராக இருக்கிறோம். எனவே இனி சூர்யா எங்கும் நடமாடவே கூடாது என கூறியுள்ளார்.