முந்தைய வாரங்களில் சரிவுடன் வர்த்தகமாகி வந்த இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள், இந்த வார வர்த்தக நாளில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, வாரத்தின் இரண்டாவது நாளான இன்று 66,071 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 0.68 புள்ளிகள் உயர்ந்து 66,024.37 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 12.10 புள்ளிகள் உயர்ந்து 19,686.65 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 66,023 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,674 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
கடந்த வாரத்தில் அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் பங்குச்சந்தையானது வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வந்துள்ளது. முன்னதாக, 19 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது.
அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது. சென்செக்ஸில், ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவை சரிவை சந்தித்துள்ளன. டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமென்ட், லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளன.
