பங்குச்சந்தை சரிவு.! சென்செக்ஸ் 66,166 புள்ளிகளாக நிறைவு.!
கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அந்த வகையில் வாரத்தின் முதல் நாளான இன்றும் வீழ்ச்சியுடன் வர்த்தகமான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
அதன்படி, 66,238 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 115.81 புள்ளிகள் சரிவடைந்து 66,166.93 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 19.30 புள்ளிகள் சரிவடைந்து 19,731.75 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
முந்தைய வர்த்தக நாளில் 66,034 புள்ளிகள் என வீழ்ச்சியுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 125.65 புள்ளிகள் சரிவடைந்து 66,282.74 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 42.95 புள்ளிகள் சரிவடைந்து 19,751.05 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இந்த பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணமாக அமைந்தது.
முன்னதாக நிஃப்டி முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.