வரலாறு காணாத கனமழையால் தென் மாவட்ட ரயில்கள் ரத்து..!

Dec 18, 2023 - 02:01
 0  1
வரலாறு காணாத கனமழையால் தென் மாவட்ட ரயில்கள் ரத்து..!

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில், நெல்லை- தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நிஜாமுதீன்- குமரி விரைவு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. முத்துநகர் ரயில் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில்  இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி- தூத்துக்குடி இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல திருச்செந்தூர் விரைவு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!

மேலும்,  பெங்களூர்- நாகர்கோவில் விரைவு ரயில் மதுரை மட்டுமே இயக்கப்படுகிறது. மும்பை - நாகர்கோவில் விரைவு ரயில் திண்டுக்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை -எழும்பூரில் இருந்து புறப்பட்ட கொல்லம் விரைவு ரயில் விருதுநகர் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை -குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருச்சி- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் , தாம்பரம் -செங்கோட்டை விரைவு ரயில் விருதுநகர், ராஜபாளையம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் எனவும் நெல்லை- தூத்துக்குடியில் இருந்து புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow