இந்தியா கூட்டணிக்கு தூக்கமே இல்லை.. பலர் குழம்பி உள்ளனர்… பிரதமர் மோடி விமர்சனம்

pm modi

PM Modi: தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்த ஆதரவால் பலர் குழம்பி போயிருக்கிறார்கள் என்று நெல்லை பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு. மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தந்து சென்னை உள்ளிட்ட இடங்களில் வாகன பேரணி, கூட்டத்தில் பங்கேற்று தங்களது வேட்பாளர்களுக்கு … Read more

உங்கள் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும்… பிரதமர் மோடி உத்தரவாதம்!

pm modi

PM Modi : தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை திறந்து வைத்தும், அடிக்கலும் நாட்டியும் வைத்தார். இதில் குறிப்பாக, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் திட்டம் உள்ளதவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். Read More – வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது… பிரதமர் மோடி பேச்சு! அதேசமயம் குலசேகரன்பட்டினத்தில் … Read more

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!

cmstalin

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கி பின்னர் முதல்வர் பேசுகையில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்கள் நலன் கருதி தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் நான்  மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் வேம்பாரில் 7 கோடி ரூபாய் மதிப்பில் வேம்பார் பனைபொருள்கள்  குறுங்குழுமம் அமைக்கப்படும். கோவில்பட்டி பகுதியில் 10 கோடி மதிப்பில் கோவில்பட்டி  கடலைமிட்டாய் குறுங்குழுமம் அமைக்கப்படும். தூத்துக்குடியில் … Read more

தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! – நெல்லை ஆட்சியர்

thamirabarani

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல், மிக கனமழை பெய்து வருகிறது. மேலும், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், கனமழை அறிவிப்பை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, நெல்லை மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள … Read more

நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு..!

தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேர்வுகள் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதற்கிடையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 17ஆம் தேதி தொடங்கி பெய்த  கனமழை காரணமாக தேர்வுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கும் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. … Read more

4 மாவட்ட வெள்ள பாதிப்பால் 31 பேர் உயிரிழப்பு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!

thoothukudi floods Nirmala

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்தும் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி வெள்ள பாதிப்பால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், அனைத்து உதவிகளையும் மத்திய அரசு … Read more

ரெட் அலர்ட் தொடரும்! அதி கனமழை தான், மேகவெடிப்பு அல்ல… வானிலை ஆய்வு மையம்!

Balachandran

தமிழகத்தில் வரலாறு காணாத கன மழையை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் சமீபத்தில் சந்தித்த நிலையில், நேற்று முன்தினம் முதல் தென் தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசியில் அதி கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசும், அரசு அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தென் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் இந்த … Read more

இந்த 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்… வானிலை மையம் அறிவிப்பு!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்டங்களில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இல்லங்களை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு ஏராளமான மக்கள் முடங்கியுள்ளனர். தென்மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பெய்துவரும் கனமழை காரணமாக, தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. … Read more

வரலாறு காணாத கனமழையால் தென் மாவட்ட ரயில்கள் ரத்து..!

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில், நெல்லை- தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நிஜாமுதீன்- குமரி விரைவு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. முத்துநகர் ரயில் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில்  இரு மார்க்கத்திலும் ரத்து … Read more

மேலும் 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி 4 ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பின்னர் ரெட் அலர்ட் காரணமாக  தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக தேனி, சிவகங்கை, ராமநாதபுரம்,  மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு … Read more