16 லட்சம் கோடி ரூபாயும் முழுதாக திரும்ப வராது.! ராகுல் காந்தி விளக்கம்.!

Congress Leader Rahul Gandhi

Rahul Gandhi : தள்ளுபடி செய்யப்பட்ட 16 லட்சம் கோடி ரூபாய் முழுதாக திரும்பி வசூல் செய்ய முடியாது என் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தற்போது நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அடுத்தகட்ட தேர்தல் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல தேர்தல் பிரச்சார களம் நாளுக்கு நாள் பரபரப்பாக இயங்கி … Read more

காலி சொம்பு மட்டும் தான் மிச்சம்… பாஜகவை சொம்புடன் ஒப்பிட்டு விமர்சித்த ராகுல் காந்தி!

rahul gandhi

Rahul Gandhi: பாஜகவை ‘பாரதிய சொம்பு கட்சி’ என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 19ம் தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இதன்பின் நேற்று 13 மாநிலங்களில் உள்ள 88 … Read more

பிரதமர் பதற்றத்தில் இருப்பது பேச்சிலேயே தெரிகிறது… ராகுல் காந்தி விமர்சனம்!

Rahul Gandhi

Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் தேர்தலை முன்னிட்டு பாஜகவும், காங்கிரஸும் மூன்றாம் கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த சில நாட்களாக பாஜகவும், காங்கிரஸும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டு பிரச்சாரம் … Read more

மீண்டும் அதே பிரச்சாரம்… கார்கே கோரிக்கையை ஏற்க மறுக்கும் பிரதமர் மோடி.?

PM Modi - Mallikarjun Kharge

Election2024 : பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மீண்டும் காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி பற்றி விமர்சனம் செய்துள்ளார். . 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. தேர்தல் சமயம் என்பதால் தேசிய கட்சிகளான பாஜக , காங்கிரஸ் கட்சியினர் தங்கள் தேர்தல் பரப்புரைகளில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் வாக்குறுதி : குறிப்பாக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், சம பகிர்வு என்ற தலைப்பின் … Read more

ஜனநாயக கடமையை ஆற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.!

Pinarayi Vijayan

Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக 21 மாநிலங்களில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் 2ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கேரளாவில் … Read more

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

pm modi

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1984-ம் ஆண்டு தனது தாயார் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு, தனது சொத்துக்களை அரசுக்குப் போகாமல் காப்பாற்றுவதற்காக பரம்பரை வரியை ரத்து செய்தார். இப்போது காங்கிரஸ் மீண்டும் அந்த வரியைக் கொண்டுவர விரும்புகிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு … Read more

13 மாநிலங்கள்… 89 தொகுதிகள்… இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.!

2nd Phase Lok sabha election 2024

Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் கடந்த வாரம் ஏப்ரல் 19ஆம் தேதி  தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்கள் நடைபெறும் தேர்தலில் இன்று (ஏப்ரல் 26) காலை 7 மணி முதல் 2ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் … Read more

உங்களுக்கு இதே வேலையாக போச்சி… பிரதமரிடம் நேரம் கேட்ட கார்கே.!

PM Modi - Mallikajun Kharge

Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று ராஜஸ்தானில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸ் மக்கள் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை கணக்கெடுத்து, அதனை அதிக பிள்ளைகள் பெற்றவர்களுக்கும், நாட்டில் ஊடுருவியவர்களுக்கும் பகிர்ந்து அளிக்க திட்டம் போடுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தங்கத்தை கூட கணக்கெடுத்து பிரித்து கொடுத்து விடுவார்கள் என விமர்சனம் … Read more

பிரதமர் மோடி, ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

rahul gandhi

Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த சில நாட்களாக அனல் பறக்க நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் நிறைவு பெற்றது. அப்போது பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனிடையே தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி … Read more

அந்த பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்

Nayanar Nagendran

Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம் தேதி இந்த தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது சதிஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று நபர்களிடம் இருந்து சுமார் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களும் கைது செய்யப்பட்டனர். இதன்பின் கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் … Read more