தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கி பின்னர் முதல்வர் பேசுகையில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்கள் நலன் கருதி தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் நான்  மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் வேம்பாரில் 7 கோடி ரூபாய் மதிப்பில் வேம்பார் பனைபொருள்கள்  குறுங்குழுமம் அமைக்கப்படும்.

கோவில்பட்டி பகுதியில் 10 கோடி மதிப்பில் கோவில்பட்டி  கடலைமிட்டாய் குறுங்குழுமம் அமைக்கப்படும். தூத்துக்குடியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 25 கோடி மதிப்பில்  50,000 சதுர அடியில் வர்த்தக வசதி மையம் கட்டப்படும் என அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் திருநெல்வேலியில் அம்பாசமுத்திரத்திற்கு  புதிய மருத்துவமனை கட்டிடம் , வள்ளியூர் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்கப்படும், அம்பாசமுத்திரம் புறவழிச் சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

READ MORE- தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமணையுடன் இணைந்த கண்டியாபேரி அரசு மருத்துவமனை பணிகள் நிறைவடைய கூடிய நிலையில் உள்ளது. விரைவில் அதுவும் திறக்கப்படும். மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவுகள் நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளத்தால் சேதமடைந்த மாஞ்சோலை சாலை ரூ.5 கோடி செலவில் புதிப்பிக்கப்படும், திருநெல்வேலி மாநகரருக்கான மேற்கு புறவழிச் சாலை பணிகளுக்கான  திட்ட அறிக்கை அரசு ஆய்வில் உள்ளது.

இதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனைத்து பணிகளும் தமிழக மாநில நிதியில் இருந்து வழங்கப்படுகிறது என கூறினார்.

author avatar
murugan

Leave a Comment