வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து முகமது ஷமி விலகல்!

shamiodisquad

வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து முகமது ஷமி விலகியதால் உம்ரான் மாலிக் சேர்ப்பு என பிசிசிஐ அறிவிப்பு. இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி 11 30 மணிக்கு தொடங்குகிறது. வங்கதேசத்திற்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வங்கதேசம் சென்று அடைந்தது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகளில் … Read more

IPL 2023: ஐபிஎல் 2023க்கான மினி ஏலம்! வெளியான வீரர்களின் விவரம்.! 

ipl mini auction

ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கான வெளியான வீரர்களின் விவரம் மற்றும் அடிப்படை விலை. டிச-23 அன்று நடைபெற இருக்கும், ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலத்தில் 991 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் சில வீரர்களை தக்கவைத்தும் விடுவித்து உள்ளது, அந்த வீரர்களும் இந்த ஏலத்தில் பங்குபெறுகின்றனர். குறிப்பிடத்தக்க வகையில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தனது பெயரை ஐபிஎல் மினி ஏலத்திற்காக ரூ.1 கோடி அடிப்படை … Read more

VijayHazareTrophy2022: விஜய் ஹசாரே கோப்பையை வென்ற சவுராஷ்டிரா! 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.!

saurastra win 2022

விஜய் ஹசாரே 2022 தொடரின் இறுதி போட்டியில் சவுராஷ்டிரா அணி விக்கெட் வித்யாசத்தில் மஹராஷ்டிரா அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. விஜய் ஹசாரே 2022 கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இன்று ருதுராஜ் கெய்க்வாட்டின் தலைமையிலான மஹாராஷ்டிரா மற்றும் சவுராஷ்டிரா அணிகள் அகமதாபாத், நரேந்திரமோடி மைதானத்தில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக … Read more

ரிக்கி பாண்டிங்கிற்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி.!

Ponting Hos

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக இருமுறை உலகக்கோப்பையை பெற்றுத்தந்த வெற்றிகரமான கேப்டனாக இருந்த முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருக்கும் போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் சேனல் 7 டிவி நிறுவனத்திற்காக வர்ணனை செய்து கொண்டிருந்த பாண்டிங், உணவு இடைவேளைக்கு பின் வர்ணனைக்கு வரவில்லை, அவர் … Read more

#IPL2023: ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! புதிய பதவியில் பிராவோ – சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு

DwayneBravo

டுவைன் பிராவோ சென்னை அணியின் வீரராக அல்லாமல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படுவார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக, அடுத்தாண்டு வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிராவோ விடுவிக்கப்பட்டார். சென்னை அணி பிராவோவை விடுவிக்கப்பட்டதை அடுத்து, மினி ஏலத்தில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. … Read more

ஐசிசியில் இல்லாத புதிய கிரிக்கெட் விதியை அறிமுகப்படுத்தும் ஐபிஎல்.!

IPL newrule

ஐசிசி விதிகளில் இல்லாத புதிய விதியை, வரும் ஆண்டு தொடர் முதல் ஐபிஎல் அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவில் நடத்தப்படும் பிரபல கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரானது கடந்த 15 ஆண்டுகளாக 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் கடந்த 2022 ஆம் ஆண்டில் 15 சீசனை நிறைவு செய்தது. தொடங்கியது முதல் பல நாட்டு கிரிக்கெட் வீரர்களும் விரும்பி வந்து பங்கேற்கும் இந்த ஐபிஎல் தொடர் ஆனது உலகெங்கும் பிரபலம் அடைந்த கிரிக்கெட் தொடராக … Read more

FIFA WorldCup2022: நான்கு முறை சாம்பியனான ஜெர்மனி, தொடரை விட்டு வெளியேறியது.!

Germany out

ஃபிஃபா உலகக் கோப்பையில் இருந்து நான்கு முறை சாம்பியனான ஜெர்மனி அணி தொடரை விட்டு வெளியேறியுள்ளது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் தகுதி சுற்று ஆட்டத்தில் இன்று குரூப் இ பிரிவிலுள்ள ஜெர்மனி மற்றும் கோஸ்டா ரிக்கா அணிகள் மோதின. அல்பெய்த் ஸ்டேடியத்தில் இன்று அதிகாலை 12:30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது ஆட்டம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் செர்ஜ் நப்ரி ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் … Read more

ENGvsPAK Test: ஒரே நாளில் 506 ரன்கள் குவித்து இங்கிலாந்து புதிய உலகசாதனை.!

Eng vs Pak Rec

இங்கிலாந்து அணி முதல்நாள் முடிவில் 500 ரன்களுக்கு மேல் அடித்து மேலும் ஒரு  உலகசாதனை படைத்துள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இங்கிலாந்து அணி, முதல் டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 506/4 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 494/6 ரன்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. இங்கிலாந்து அணியில் ஒரேநாளில் 4 பேர் சதமடித்துள்ளனர். சாக் கிராலி 122, பென் டக்கெட் 107, … Read more

ENGvsPak Test: டெஸ்ட் போட்டிகளில் புதிய உலகசாதனை! அதிரடி காட்டிய இங்கிலாந்து.!

Eng record test

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் செசனில் அதிக ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில், டெஸ்ட் தொடரில் விளையாட சென்றுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று ராவல் பிண்டி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதன்படி களமிறங்கிய … Read more

FIFA WorldCup2022: நடப்பு சாம்பியன் பிரான்ஸின் முதல் தோல்வி.! அதிர்ச்சி வைத்தியம் அளித்த துனிசியா.

Tunisia vs Francee

ஃபிஃபா உலகக்கோப்பையில் துனிசியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த நடப்பு சாம்பியன் பிரான்ஸ். கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் குரூப்-டி விலிருந்து பிரான்ஸ் மற்றும் துனிசியா அணிகள் எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் மோதின. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி, ஃபிஃபா கால்பந்து அணிகளின் தரவரிசையில் 30-வது இடம் வகிக்கும் துனிசியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் துனிசியா … Read more