அண்ணா நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி மரியாதை..!

சென்னை மெரினா கடற்கரையில்  உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று பிப்-3ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் 54-வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அமைதிப்பேரணி சென்று மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செவ்வந்தி இல்லத்தில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 54-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது திரு … Read more

மத்திய பட்ஜெட் தாக்கல் – மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின்

MK STALIN TN CM (2)

ஒன்றிய அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப் போயிருக்கிறது என மத்திய பட்ஜெட் குறித்து முதல்வர் கருத்து.  நாடாளுமன்றத்தில் இன்று  2023-24 க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில், மத்திய பட்ஜெட் 7 முக்கிய அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து தமிழக … Read more

மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தலைமை நீதிபதி கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு..!

tn cm mk stalin

மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு.  மராட்டியம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், எங்களது அடுத்த கட்ட பணியானது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவரங்கள் அடங்கிய மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நகல்களை ஒவ்வோர் இந்திய மொழியிலும் வழங்க இருக்கிறோம் என தெரிவித்திருந்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் … Read more

“நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” – ஒருமாத ஊதியத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்..!

namma school thittam

நம்ம ஸ்கூல் பவுண்டேசன்”  திட்டத்திற்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தொகையை வழங்கியுள்ளனர்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  கடந்த வருடம் டிச.19-ஆம் தேதி முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க இத்திட்டத்தை பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது. அந்த வகையில், “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்..!

Anbumani Ramadoss

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாமக  தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். உலகில் உள்ள 103 நாடுகளை விட அதிக மக்கள் தொகை கொண்டது கும்பகோணம்.150 ஆண்டுகளுக்கு முன் 1868 ஆம் ஆண்டிலேயே கும்பகோணம் தலைநகரமாக திகழ்ந்துள்ளது. மாவட்ட தலைநகரத்திற்கு தேவையான கூடுதல் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு … Read more

கலைஞர்களை உருவாக்கும் பரந்த எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

tn cm mk stalin

கலைஞர்களை உருவாக்கும் பரந்த எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.  சென்னை மயிலாப்பூரில் நடந்த 43வது வழுவூரார் நடனம் மற்றும் இசை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இசைக்கும், நாட்டியத்துக்கும் தொண்டாற்றிய குடும்பமாக வழுவூரார் குடும்பம் திகழ்கிறது; கலைஞர்களை உருவாக்கும் பரந்த எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நில அளவை துறையில் புதிய செயலியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

stalin kalaithiruvila

புதிய மென்பொருள் செயலியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் புதிய மென்பொருள் செயலியை தொடக்கி வைத்தார். அதாவது நில அளவை மற்றும் நில வரைவு திட்ட துறையின் புதிய மென்பொருள் செயலியை தொடங்கி வைத்துள்ளார். வீட்டுமனை உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல், பட்டா மாறுதல் செய்யும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகளில் வருவாய்பின்தொடர பணிக்கான புதியசெயலியையும்  தொடங்கி வைத்துள்ளார்.

3,184 சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

stalin kalaithiruvila

3,184 சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. காவலர்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் அத்துறையை சார்ந்த பணியாளர்கள் உட்பட 3,184 பேருக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதல்வர் மு.கஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். காவல்துறையில் 3 ஆயிரம் பணியாளர்கள், தீயணைப்புத் துறையில் 118 அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்பட உள்ளது. பதக்கம் பெறுவோருக்கு மாதாந்திர பதக்கப்படி ரூ.400 பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சங்கமம்- திருவிழா! மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.!

ChennaiSangamam

நம்ம ஊரு திருவிழா “சென்னை சங்கமம்”, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தீவுத்திடலில் தொடங்கிவைத்தார். மண்ணின் மைந்தர்களான கிராமியக்கலைஞர்கள் 600 க்கும் மேற்பட்டவர்கள்  பங்குபெறும் “சென்னை சங்கமம்” நம்ம ஊரு திருவிழா ஜன-13 முதல் ஜன-17 வரை நடைபெறுகிறது. இந்த திருவிழா சென்னை தீவுத்திடல்கள் மற்றும் பூங்கா என 18 இடங்களில் நடைபெறவுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்திருவிழாவை தீவுத்திடலில் தொடங்கி வைத்தார். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த விழாவில் 600 க்கும் மேற்பட்ட கிராமியக்கலைஞர்கள் பங்குபெற்று தங்களது … Read more

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் தொடங்கியது..! ஈபிஎஸ், ஓபிஎஸ் புறக்கணிப்பு..!

ops&eps

இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை வழங்குகிறார். இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. கடந்த 9-ஆம் தேதி இந்த ஆண்டின் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது.